கருப்பாய் என்பவள் தினமும் ஜவுளிக் கடைக்கு வேலைக்கு செல்வாள்.வாரத்தில் ஆறு நாட்கள் அவளுக்கு வேலை. ஒருநாள் விடுமுறை நாள். அந்த ஒரு நாளில் வீட்டிலிருக்கும் துணிகளை கொண்டு போய் ஆற்றில் துவைத்து வீட்டுக்கு வருவாள். அவள் வீட்டில் இருந்து ஆறு அரை கிலோ மீட்டர் தூரம். அந்த அரை கிலோ மீட்டர் நடந்து செல்வாள். அப்படி ஒருநாள் ஆற்றுக்குச் சென்று துணி வைத்து விட்டு வரும் பொழுது அவள் காலுக்கு அடியில் எங்கிருந்தோ ஒரு பாம்பு சைடில் வந்து விட்டது. அவள் அதை தெரியாமல் மிதித்து விட்டால் .உடனே அவளை பாம்பு கடித்து விட்டது. அக்கம் பக்கம் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் எவ்வளவு முயற்சித்தும் அவளை காப்பாற்ற முடியவில்லை. அவள் எதிர்பாராத மரணம் அடைந்தாள் .எதிர்பாராதவிதமாக மரணம் ஏற்படலாம் .
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது


கருத்துகள்
கருத்துரையிடுக