குமார் தன் மனைவி வசந்தாவுடன் கிராமத்தில் வசித்து வந்தான் .அவன் தினமும் கூலி வேலைக்கு செல்வான். குமார் வசந்தா தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. அவன் பெயர் மோகன் .நான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். அந்த கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில். குமார் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வாரத்தில் மூன்று நாட்கள் மது குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவான். அப்படி வரும் போதெல்லாம் தன் மனைவியை அடிப்பான். அப்பொழுது குமாரின் மகன் மோகன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். அப்பொழுது குமார் தன் மனைவியை சில தகாத வார்த்தைகள் பேசுவான்.இதையே வாடிக்கையாய் வைத்திருந்தான். ஒருநாள் குமாரரும் அவன் மனைவியும் வெளியில் அமர்ந்திருந்தனர்.அப்போது அவர்கள் வீட்டுக்கு சில உறவினர்கள் வந்தனர். அவர்களை உள்ளே கூட்டிக்கொண்டு சென்றுவிட்டு அவங்களுக்கு காபி வைத்துக் கொடுத்தாள் வசந்தா.குமார் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது குமாரின் மகன் மோகனிடம் அங்கு வந்த உறவினர் ஏதாவது பேசு என்றார் மோகன் தகாத வார்த்தை பேசினான். வசந்தாவும் குமாரும் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர் குமாரிடம் பிள்ளைக்கு என்னப்பா சொல்
லி கொடுத்திருக்கா என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் .இந்த சம்பவத்திற்கு பின் குமார் குடித்துவிட்டு வருவதும் இல்லை தன் மனைவியை அடிப்பது இல்லை தகாத வார்த்தை பேசுவதும் இல்லை.
லி கொடுத்திருக்கா என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் .இந்த சம்பவத்திற்கு பின் குமார் குடித்துவிட்டு வருவதும் இல்லை தன் மனைவியை அடிப்பது இல்லை தகாத வார்த்தை பேசுவதும் இல்லை.
குழந்தைகள் முன் எப்போதும் நல்லதை செய்ய வேண்டும் பேச வேண்டும்




கருத்துகள்
கருத்துரையிடுக