மருதமுத்து என்பவன் திருப்பூரில் பிரபலமான பனியன் நிறுவனத்தில் டெய்லர் வேலை பார்த்து வந்தான். Tea time 10.15am to 10.30am.அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் ஒரு டீயின் விலை ரூபாய் 5.முதலில் வரிசையாக நின்று ஒரு பக்கம் டி டோக்கன் வாங்கிக்கொண்டு பின்பு டீ சாப்பிட செல்ல வேண்டும்.மருதமுத்து எப்பொழுதும் ஐந்து ரூபாய் கொடுத்துதான் டோக்கன் வாங்கிக்கொண்டு டீ குடிப்பான். மருதமுத்து விற்கு ஒருநாள் ஒரு ஐடியா தோன்றியது ஒரு டோக்கன் வாங்கி வைத்துக் கொண்டு ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டால் என்ன கண்டு பிடிக்கப் போகிறார்கள் என்று. அவ்வாறு செய்தான். பல நாட்கள் கலர் ஜெராக்ஸ் டோக்கன்கொடுத்துவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் மாட்டிக்கொண்டான். அவனை அந்த நிறுவனத்தில் வேலையை விட்டு தூக்கி விட்டார்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் மருத முத்துவின் விஷயம் தெரிந்துவிட்டது .இதனால் மருதமுத்து தலைகுனிந்தான். பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக்கொண்டான்
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக