குமார் என்பவன் மே மாதத்தில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒரு நாள் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தார் மே மாதம் வந்தது அவர்கள் திட்டமிட்டு இருந்தபடி ஒரு நாள் சுற்றுலாவாக ஊட்டிக்கு சென்றார்கள் .குமார் மற்றும் அவன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மொத்தமாக பத்து நபர்கள் ஒரேஒரு நான்கு சக்கர வாகனத்தில் சென்றார்கள். நான்கு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றனர்.குன்னூர் அருகே ஒரு கிலோமீட்டர் முன்பாக வாகனம் சென்று கொண்டிருந்தது அப்பொழுது எதிர்பாராத விதமாக நான்கு சக்கர வாகனம் பழுதாகிவிட்டது. டிரைவர்மெக்கானிக்கை கூட்டிக் கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டுகுன்னூர் செல்லும் இருசக்கர வாகன பயணியிடம் லிப்ட்கேட்டு விட்டு சென்றுவிட்டார்குமார் மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள்அங்கேயே நின்று கொண்டிருந்தனர் ஒரு மணிநேரமாக ஒரு மணி நேரம் கழித்து மெக்கானிக் வந்தார் 4 சக்கர வாகனத்தைபார்த்துவிட்டு வண்டி சரியாக ஒரு நாள் ஆகும் என்று சொல்லிவிட்டார். உடனடியாக டிரைவர் குன்னூரில் இருக்கும் தனது நண்பரின் வண்டியை குமார் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வர சொன்னார் அந்த வண்டி வருவதற்கு ஒன்றரை மணி நேரமானது அந்த வண்டியில் ஏறி குமார் ஆனால் நண்பர்கள் உறவினர்கள் ஊட்டிக்கு சென்றனர் ஒருநாள் சுற்றுலாவில் மூன்று மணி நேரம் கழிந்து விட்டது அவர்கள் ஒருநாள் சுற்றுலாவில் ஊட்டியில் ஆறு இடங்கள் பார்க்க பிளான்பண்ணி இருந்தார்கள் ஆனால் கூட்டம் அதிகம் மற்றும் நான்கு சக்கர வாகனம் பழுது காரணமாக ப இரண்டு இடங்களை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட்டனர். சுற்றுலா செல்லும்போது நாம் செல்லும் வாகனம் நல்ல நிலையில் உள்ளதா என்று பார்த்துக் கொண்டு செல்லவேண்டும்
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக