அந்த கிராமத்தில்குப்புசாமி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மது குடிப்பது வழக்கமாக வைத்திருந்தார். அவர் அவன் காட்டு வேலைக்குச் செல்வார். அவர் அந்த கிராமத்தில் அதிகமாக மது குடித்துவிட்டு அங்கங்கே விழுந்தே கிடப்பார். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் இவருக்கு இதே வேலையை தான் என்று சென்று விடுவார்கள். குப்புசாமியும் மது போதை தெளிந்த பின் எழுந்து அவர் வீட்டுக்கு சென்று விடுவார். இதைக் ஒரு வழக்கமாக வைத்திருந்தார். அந்த கிராமத்தில் குப்புசாமி ஒரு நாள் நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் மது அருந்தவில்லை நார்மலாக தான் இருந்தார். அப்பொழுது 2 சக்கர வாகனத்தில் வந்த ஒருவன் அவர்மேல் வண்டியை விட்டுவிட்டு சென்று விட்டான் அவருக்கு தலையில் அடிப்பட்டு மயங்கி விழுந்து விட்டார். அவர் மது அருந்தி விட்டு தான் விழுந்து கிடக்கிறார் என்று அந்த கிராமத்தில் உள்ளார்கள் நினைத்துக்கொண்டு அவரவர்கள் அவரவர் வேலையை பார்க்க சென்று கொண்டு இருந்தனர். இரண்டுமணி நேரம் கழித்து ஒருவன் அவர் தலையில் ரத்தம் உறைந்து இருப்பதை கண்டான். அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது ஒரு உண்மை கதை
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக