கவின் பிரியாவுக்கு அத்தைமகன்இருவரும் பள்ளிப்பருவம் முதலே ஒன்றாக ஒரே ஏரியாவில் வசித்து வந்தனர்.இருவருக்கும் ஒரே வயது என்பதால் பன்னிரண்டாம் வகுப்பு வந்தவுடன் காதலிக்க தொடங்கினர். கவின் ஐ விட பிரியாவுக்கு கொஞ்சம் வசதிகள் அதிகம். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் பிரியா இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தாள். கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்தார் கவினும் மூன்று வருடங்கள் முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தான்.பிரியாவும் 4 வருடங்கள் இன்ஜினியரிங் முடித்தாள். இருவரும் வெவ்வேறு கல்லூரிகள் இருந்ததால் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பை இல்லை. கவிஞன் தனது தங்கையின் திருமணத்திற்காக பணம் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தான் .பிரியா அவனிடம் நாம் இருவரும் உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றாள். கவின் தங்கையின் திருமணம் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டான் கவின். பிரியாவின் அப்பா பிரியாவின் திருமணத்திற்காக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார். பிரியா தன் தந்தையிடம் தான் கவினை காதலிப்பதாக சொல்லி விட்டாள். ஆனால் கவின் தங்கையின் திருமணம் முடியும் வரை காத்திருக்க சொல்லி இருந்தான் என்றாள் பிரியா. ஆனால் பிரியாவின் அப்பாவுக்கு கவினை சுத்தமாக பிடிக்காது எனவே பிரியாவுக்கு உடனடியாகத் திருமணம் செய்து வைத்துவிட்டார். பிரியா தன் கணவரின் வீட்டுக்கு சென்றுவிட்டாள். கவின் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருக்கிறான்
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக