ஒரு ஊரில் ஒரு மீனவன் வாழ்ந்து வந்தான். அவன் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தான். அவன் தினமும் இரவில் மீன்பிடிக்கச் சென்று விடுவான். காலையில் வந்து விடுவான். பிடித்து வந்த மீன்களை 12 மணிக்குள் மீன் மார்க்கெட்டில் விற்று விடுவான். மதிய வேளையில் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி விடுவான். இதே வேலைய தினமும் செய்து வந்தான். வீடு கிராமத்தில் தனியாக இருந்தது .மதியம் ஒரு நாள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். அவன் வீட்டுக்குள் படுத்துக்கொண்டு இருந்தான். அவனது நாய் வெளியே கட்டப்பட்டிருந்தது. அவன் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தான்.அப்பொழுது அவன் வீட்டுக்குள் ஒரு பாம்பு போனது. அவனது நான் நன்றாக குறைத்தது. ஆனால் அவன் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை. பாம்பு அவன் அருகில் சென்று விட்டது. நாய் உடனடியாக செயினை பித்துக்கொண்டு ஓடியது பாம்பின் அருகில். பாம்பும் நாயும் சண்டை போட்டன. மீனவன் தூக்கத்திலிருந்து கண் விழித்து பார்த்தபோது கடைசியில் இரண்டு விலங்குகளும் இறந்து கிடந்தன.
கதையின் நீதி
நாய் நன்றியுள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக