மலையூர் என்ற ஊரில் கணேஷும் அவனது அம்மா பார்வதியும் வசித்துவந்தனர். இருவரும் காட்டு வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்தனர். மலையூர் கிராமம் சோலையூர் நகரம்.மலையூர் இல் இருந்து சோலையூர் க்கு நடந்து ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். மலையூர் இல் கடைகள் எதுவும் இல்லை. சோலையூர் எல்லா பலசரக்குக் கடைகள் காய்கறிக் கடைகள் திரையரங்கம் போன்றவை உள்ளது.ஒரு நாள் கணேஷும் தனது நண்பன் குமாரும் இரவு சினிமாவுக்கு புறப்படுவதாக இருந்தனர். அப்பொழுது கணேஷின் அம்மா மற்றும் குமாரின் அம்மா இருவரும் இரவுக்காட்சிக்கு செல்லாதிர்கள் பகல் காட்சிக்கு செல்லலாமா என்று அறிவுறுத்தினார்.ஆனால் கணேஷ் மற்றும் குமார் இருவரும் இல்லை அம்மா இந்தப்படம் இன்றுடன் எடுத்து விடுவார்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட்டனர் சினிமாவுக்கு. படம் பார்த்து முடித்து விட்டு இருவரும் ஆற்றைக் கடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது. குமாரும் கணேசும் இறந்துவிட்டனர். மறுநாள் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊரிலிருந்து இரண்டு பாறைகளுக்கு நடுவே இருந்த இரு உடல்களை மீட்டு இருவரின் தாயார் இடமும் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரும் முன்பு தாய் சொல்லைக் கேட்டு இருக்கலாம் கதையின் நீதி
தம்மைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த அன்னை சொல்லை எப்போதும் கேட்க வேண்டும்
கருத்துகள்
கருத்துரையிடுக