ரமேஷ் மற்றும் சுரேஷ் இருவரும் நண்பர்கள். இருவரும் ஒரே ஊரில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இருவரும் கூலி வேலைக்குச் செல்வார்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ரமேஷ் ஒரு குடிகாரன்,மற்றும் மற்ற புகைப்பிடிப்பது, பாக்குப் போடுவது போன்ற கெட்ட பழக்கங்கள் அவருக்கு நிறைய உண்டு. அவன் அன்றாட சம்பாதிக்கும் காசை அன்றே செலவு செய்து விடுவான். சுரேஷ் மிகவும் நல்லவன் அன்றாட வாங்கும் சம்பளத்தில் பாதியை செலவு செய்துவிட்டு மீதியை சேமித்து வைக்கும் பழக்கம் உடையவன். அவன் எப்போதும் சிக்கனமாக இருப்பான். அவனுக்கு எந்த ஒரு கெட்ட வழக்கம் கிடையாது. ஒருநாள் மழை காலம் வந்தது. இருவருக்கும் வேலை கிடைக்க வில்லை. சுரேஷ் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை நன்றாக வாழ்ந்தான். ரமேஷ் செலவுக்கு காசு இல்லாமல் கஷ்டப்பட்டான். யார் யாருக்கு என்ன பிரச்சனை வரும் என்று யாருக்கும் தெரியாது. சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். சேமிப்பு மிக முக்கியம்
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக